Saturday, August 4, 2018

11 முதல் 19 வரை உள்ள எந்த இரு எண்களையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கும் முறை

கடினமான கணக்குகளையும் எளிதில் கண்டுபிடிக்கும் சுலபமான வழிகளில் தற்போது 11 முதல் 19 வரை உள்ள எந்த இரு எண்களையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கும் முறையை இப்போது காணலாம். இதற்காக செய்ய வேண்டி யது மிகச்சிறிய நான்கு படிகள் தான்.
==> முதலில் பெருக்க வேண்டிய எண்களில், முதல் எண்ணை முழுமையாகவும், இரண்டாவது எண்ணின் கடைசி எண்ணையும், கூட்டிக்கொள்ள வேண்டும். உதாரணமாக 15 * 17 ஐ எடுத்துக்கொள்வோம். இதில் முதல் எண்ணாண 15ஐ முழுமையாகவும், இரண்டாவது எண்ணான 17ல் 7ஐ மட்டும் எடுத்துக்கொண்டு கூட்டிக்கொள்வோம்.
15 + 7 = 22
==> இதன் மூலம் வரும் கூட்டல் விடையை 10 ஆல் பெருக்க வேண்டும். வரும் விடையை தனியாக எடுத்தெழுதி கொள்க.
22 * 10 = 22
0 ==> அடுத்து, பெருக்க வேண்டிய இரண்டு எண்ணிலும் உள்ள கடைசி எண்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஒன்றை ஒன்று பெருக்கிக் கொள்க.
15 * 17 = 5 7
5 * 7 = 35
==> தற்போது வந்த விடையையும், ஏற்கனவே 10ஆல் பெருக்க கிடைத்த விடையையும் கூட்டிக்கொள்ள, இறுதி பெருக்கல் விடை கிடைத்து விடும். 220 + 35 = 255 ஃ 15* 17 = 255… மற்றுமொரு உதாரணமாக
18 * 14 = ?
(18+4) * 10 = 220
8*4 = 32
220 + 32
——
252
——
ஃ 18 * 14 = 252….

No comments:

Post a Comment